454. தில்லியில் தொடர் குண்டுவெடிப்பும் துப்பு கெட்ட அரசும்
இன்று மாலை 6.15 மணி அளவில் சுமார் 45 நிமிடங்களில் தில்லியில் 5 இடங்களில் குண்டு வெடித்ததில், இது வரை வந்த செய்திகளின்படி, சுமார் 20 பேர் பலியாயினர், 90 பேர் காயம். கரோல் பாக், பரகாம்பா ரோடு, கன்னாட் பிளேஸ், கிரேட்டர் கைலாஷ் ஆகிய இடங்களில் மார்க்கெட் பகுதியில் குண்டுகள் வெடித்துள்ளன. டிவி செய்திகளில், சிதறடிக்கப்பட்டவர்களையும், அடிபட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அப்பாவி பொதுமக்களையும் பார்த்தபோது நெஞ்சம் கனத்துப் போனதோடு, இரக்கமற்ற தீவிரவாத அரக்கர்கள் மீதும், காலணாவுக்கு பிரயோஜனம் இல்லாத, பொறுப்பில்லாத, திடமில்லாத அரசு சார்ந்த அமைப்புகள் மீதும் அசாத்திய கோபம் ஏற்பட்டது.
தொடர்ந்து, ஜெய்ப்பூர், பெங்களூர், அகமதாபாத் என்று தீவிரவாதம் திட்டம் தீட்டி துல்லியமாக நாட்டிற்கு பெரும் சேதம் ஏற்படுத்தியும், உருப்படியாக எந்த ஒரு ஆக்ஷனும் எடுக்கத் துப்பில்லாமல், சதாசர்வ காலமும், அணுஆயுத ஒப்பந்தம் நிறைவேற்றுவது ஒன்றை மட்டுமே தனது வாழ்க்கைக் குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வரும் பிரதமரும், அவரது லாயக்கற்ற சகாக்களும் தான் இந்த அவல நிலைக்கு முழு பொறுப்பு :(
தீவிரவாததிற்கு எதிராக மத்திய அரசு தானும் எந்த ஒரு திடமான முடிவும் எடுக்காமல், பெருமளவு பாதிப்புக்கு ஆளான குஜராத்தில் மோடி தீவிரவாதத்தை ஒடுக்க எடுத்து வந்திருக்கும் சட்டத்தை எதிர்த்து நீதிமன்றத்துக்கு சென்றுள்ள கேவலமான செயல் குறித்து என்ன சொல்வதென்று தெரியவில்லை !!!
அநியாயமாக உயிரிழந்த அப்பாவிகளுக்கு என் அஞ்சலியையும், நாடாளும் தகுதியற்ற இந்த மத்திய அரசுக்கு எதிரான என் கடுமையான கண்டனங்களையும் பதிவு செய்கிறேன்.
எ.அ.பாலா
57 மறுமொழிகள்:
Test :(
shareyour sameview
i fear some guys come with spin story victims had themselves bombs not from so called terrrorists :-(
///Test :(///
பாலா...
இந்த அரசின் இண்டக்ரிட்டி, ரிலையபிலிட்டிய எல்லாம் டெஸ்ட் பண்ணவேண்டிய காலகட்டத்துல இருக்கோம்...
மைய அரசு ஒரு லைய்ய அரசால்ல இருக்கு...
அமெரிக்க அணு ஒப்பந்தத்தில் மக்களிடம், எதிர்க்கட்சிகளிடம் பொய்.
இலங்கைக்கு கூலிப்படையை அனுப்பியதில் மக்களிடம், கூட்டணி கட்சிகளிடமே பொய்...
மன்மோகன்சிங் டர்பன் மண்டைக்குள் இருப்பது மூளையா களிமண்ணா ? சோனியா முந்தானையை என்னைக்கு இந்தாளு விடுவாரு....
/சதாசர்வ காலமும், அணுஆயுத ஒப்பந்தம் நிறைவேற்றுவது ஒன்றை மட்டுமே தனது வாழ்க்கைக் குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வரும் பிரதமரும், அவரது லாயக்கற்ற சகாக்களும் தான் இந்த அவல நிலைக்கு முழு பொறுப்பு :(/
ஏங்க அவருக்கு அணு ஆயுத ஒப்பந்தம் நிறைவேற்றுவதுக்கு அப்பாலே, ஸ்ரீலங்கா அரசுக்கும் இராணுவத்துக்கும் யுத்த தளவாடங்கள் வழங்கித் தமிழர்களைக் கொல்ல உதவுவதும் ஒரு பக்கா வேலை இருக்கிறதே. அதை நீங்களோ உங்க 'சோ'க்கான துக்ளக் ப்ரெண்டுகளோ கண்டு கொள்ளமாட்டீர்களா?
அநியாயமாக இந்திய யுத்ததளவாடங்களின் உதவியினாலே உயிரிழந்த ஈழத்தமிழ் அப்பாவிகளுக்கு என் அஞ்சலியையும், நாடாளும் தகுதியற்ற இந்திய மத்திய அரசுக்கு எதிரான என் கடுமையான கண்டனங்களையும் பதிவு செய்கிறேன்.
என்னதான் வேணுமாமாம் இந்த நாறப்பசங்களுக்கு?
//...தகுதியற்ற இந்த மத்திய அரசுக்கு எதிரான என் கடுமையான கண்டனங்களையும் பதிவு செய்கிறேன்.// உடன்படுகிறேன். அதோடு இப்படி இரக்கமின்றி பாதகம் செய்பவர்களுக்கு எதிராகவும் என் கடுமையான கண்டனங்களையும் பதிவு செய்கிறேன்
Raveendran chinnasamy,
These shameless guys will even say that people who died (in the blasts) actually committed suicide themselves !!!
செந்தழல் ரவி,
மெத்தப் படித்த நம்ம பிரதமர் செய்யறதையெல்லாம் பார்த்தா, பயங்கரக் கடுப்பா இருக்கு, இந்த ஒப்புக்குச் சப்பாணி ஆளை வீட்டுக்கு அனுப்பிச்சாத் தான் நாட்டுக்கு விடிவுகாலம் !
பெயரிலி அண்ணே,
இந்தப் பதிவு தில்லி குண்டு வெடிப்பு பத்தி ! இந்தியா இலங்கை அரசுக்கு தளவாடங்கள் சப்ளை பண்றது சரின்னு நான் ஒரு நாளும் சொல்ல மாட்டேன் !!! சில தினங்கள் முன்பு, புலிகள் இலங்கைக்கு சப்ளை பண்ண ராடார்களை தாக்கி அழிச்சபோது ஒரு பதிவு போடணும்னு நினைச்சு, பணிச்சுமையில் போட முடியாம போச்சு. அதான் மேட்டர், நீங்க குறிப்பிட்டுச் சொன்னதால், இப்ப எனது (இலங்கைக்கு ராணுவத் தடவாளங்கள் சப்ளை செய்த இந்திய அரசு மீதான) கடுமையான கண்டனங்களை பதிவு செய்கிறேன். "சோ"க்கான துக்ளக் ப்ரெண்டுகளின் கருத்துகளை நீங்களே அவங்க கிட்ட நேர கேளுங்களேன் !
சுரேஷ்,
//என்னதான் வேணுமாமாம் இந்த நாறப்பசங்களுக்கு?//
என்ன, மனுஷ ரத்தமும் சதையும் தான், அரக்கர்கள் வேறென்ன தின்பார்கள் ?
தருமி ஐயா,
தீவிரவாத மிருகங்களுக்கு எதிராக கண்டனம் தெரிவிப்பதில் யாதொரு பயனும் இல்லை என நான் நினைத்ததால் தான் அதை விட்டு விட்டேன் :(
பாலா,
உங்கள் கோபத்திலும் கண்டனத்திலும் எங்களுடைய கண்டனத்தையும் இணைத்துக் கொள்கிறோம். இங்கே - 'எங்கள்' என்று சொன்னது சாதி மத இன உணர்வுகளைக் கடந்த மனித நேயத்தை போற்றுகிற, தீவிரவாதத்தை மறுக்கிற கூட்டத்தை.
பெயரில் ரமணீதர கந்தையா,
அரசு பயங்கரவாதத்தைப் பற்றி 'சோ' கூட்டம் எழுதியிருக்கிறது நிறையவே. கூடவே புலிகளின் பயங்கரவாதத்தைப் பற்றியும் எழுதியிருக்கிறது. உங்கள் குழப்படி படங்களுக்கிடையே சாமர்த்தியமாக நீங்கள் மறைக்கும் புலிகளின் இரத்த வெறியையும், சிங்களர் மட்டுமல்லாது சகதமிழர்களையே தீர்த்துக் கட்டிய அதிகார வெறியையும் உரித்துக் காட்டியிருக்கிறார்கள்.
நீங்கள் வழக்கம்போல் காண வேண்டியவற்றைக் கண்டும் காணாதவற்றை மறைத்தும் போட்டோக்களை மாற்றிப் போடுவது போல் உண்மைகளை மாற்றி எழுதலாம்.
கேட்டால் நான் இந்தியன் இல்லை. எனக்கு இந்திய பாஸ்போர்ட் இல்லை என்று புலம்புவீர்கள். இதற்கு மேல் பகிர ஒன்றுமில்லை. தொடருங்கள் உங்கள் காழ்ப்புணர்ச்சி பிதற்றலை.
The home minister, Shivraj Patil is the one to be sacked. It is this useless idiot who don't have a clue on the state of the security. He talks like TV reporter rather than a minister in a government.
Every one knows MMS cannot wag a finger against Patil in the cabinet. It is the Rajmata that can do something.
அதுவும் பத்தோடு பதினொன்றாக கொஞ்சநாட்களிலேயே செய்தியிலிருந்து மறைந்து, மறந்து போகக்கூடும்.
ஆனாலும் அப்பாவி மக்களைப் பாதிக்கும் இது போன்ற சம்பவங்களுக்கு....
என்ன பதில் சொல்லப்போகிறது அரசு?
அநாமதேயம் நன்றி.
இன்னமும் "ரமணீதர", "சிங்களர்" என்றுதானா எழுதுகின்றீர்கள்? புலி+பாஸ்போர்ட்+காழ்ப்பு; சரி. நல்லது.
சோ ராமசாமி அரச பயங்கரவாதத்தை எதிர்த்திருக்கிறாரா? அடடா கண்ணைத் திறந்திருக்க்கின்றீர்களே?பெரியண்ணர்கள் சொன்னால், சரி.
சம்பந்தமில்லாமல் இறக்கும் இடையிலே இறக்கும் எவரினது இறப்பும் கவலையானதே - இப்போது தில்லியிலே நிகழ்ந்தவை உட்பட.
குஜராத்தின் மோடியின் சட்டத்தைப் பாலா சாட்டோடு சாட்டாக இதே பதிவிலே எவ்விதமான வெட்கமுமின்றி ஆதரிப்பதுபோலத் தோன்றியதாலேயே எழுதவேண்டியதாயிற்று (இந்தியாவின் சட்டம் பற்றி எனக்கென்ன கவலையென்று கேட்டால், வவுனியா அரசபாதுக்காப்பைப் பற்றி, உமக்கென்ன கவலை என்று கேட்கவேண்டி வரும்). குஜராத், காஷ்மீர், மணிப்பூர் அரச, இந்துத்துவா வன்முறை குறித்து பாலா என்றேனும் அன்புடன் எழுதி நான் பார்க்கவில்லை.அதுதான் இங்கே உறுத்துகிறது.
நீங்கள் மட்டும் குஜராத்திலே நடப்பன, காஷ்மீரிலே ஊர்வன வந்தால், கம்மென்று இருந்துவிடுவீர்களே?
முதலில் இறந்தவர்களுக்கு என் அஞ்சலிகள்!
பாலா - மன்மோகன் சிங் மட்டுமல்ல வாஜ்பாய், அத்வானி, முலாயம் என்று எந்த அரசியல்வாதி இருந்தாலும் இதையேதான் செய்து கொண்டிருந்திருப்பார்கள். Tell me one instance when India had acted with guts to thwart these terrorists? அணுஆயுத ஒப்பந்தத்தையும் மற்ற விஷயங்களையும் இதனோடு தொடர்பு படுத்துவதே தவறு. முதலில் மக்கள் மனதில் மாற்றம் உண்டாகவேண்டும். இப்ப தெரியுதா ஏன் அமெரிக்கா preemptive strike நடத்த தயாராக இருக்கவேண்டும் என்று புஷ் சொன்னார் என்று? அப்ப எல்லாம் வேடிக்கையா இருந்துச்சு இல்ல? இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் அமெரிக்க கொள்கைகளை மட்டம்தட்டி கிண்டல் அடித்து நமது அதிமேதாவித்தனத்தை காட்டிக் கொண்டிருக்கப்போகிறோம்?
நம்ம நாட்டுல மனுஷன் செத்தாலே நாய்பாடு அதுல ஈராக்ல சாவரானுகன்னு கண்ணீர் உட்டுகிட்டு இருக்கற இந்தியர்கள் முதலில் முழித்துக்கொள்ளவேண்டும்!
நம்ம வூடு எரியும் போது கூட சொரனை இல்லைன்னா இதப்பத்தி எழுதுவதுக்கூட நேரத்த வீணாக்குவதுபோல்தான்!
-டைனோ
அரசு என்ன பன்ன முடியும்? ஆனால் அரசு போன முறை பொங்களூர், அகமதாபாத் போன்ற இடங்களில் நடந்த குண்டு வெடிப்பு பற்றி எந்த வித விசாரனையும் செய்யவில்லை என்று என்னுகிறேன்.
அப்பாவி மக்களை ஏன் இப்படி துன்புருத்துகிறார்கள்?
//துப்பு கெட்ட அரசும்//
பெங்களூர், அகமதாபாத் ஆகிய இடங்களில் குண்டு வெடித்த போதும், ஒரிசாவில் தேவாலயங்கள் எரிக்கப்பட்ட போதும் நீங்கள் (மற்றும் உங்களைப்போன்ற மெத்தப்படித்தவர்கள்) துப்பு கெட்ட என்ற வார்த்தையை பயன் படுத்தியதாக ஞாபகம் இல்லையே.
//பெயரிலி அண்ணே,
இந்தப் பதிவு தில்லி குண்டு வெடிப்பு பத்தி ! இந்தியா இலங்கை அரசுக்கு தளவாடங்கள் சப்ளை பண்றது சரின்னு நான் ஒரு நாளும் சொல்ல மாட்டேன் !!! சில தினங்கள் முன்பு, புலிகள் இலங்கைக்கு சப்ளை பண்ண ராடார்களை தாக்கி அழிச்சபோது ஒரு பதிவு போடணும்னு நினைச்சு, பணிச்சுமையில் போட முடியாம போச்சு. அதான் மேட்டர், நீங்க குறிப்பிட்டுச் சொன்னதால், இப்ப எனது (இலங்கைக்கு ராணுவத் தடவாளங்கள் சப்ளை செய்த இந்திய அரசு மீதான) கடுமையான கண்டனங்களை பதிவு செய்கிறேன். "சோ"க்கான துக்ளக் ப்ரெண்டுகளின் கருத்துகளை நீங்களே அவங்க கிட்ட நேர கேளுங்களேன் !//
இலங்கை தமிழர்களை விடுங்கள் சனியன்கள் செத்து ஒழியட்டும், முடிந்தால் அமெரிக்காவிடம் வாங்கும் விமானங்களை கூட சிங்கள அரசுக்கு கொடுத்து உதவலாம்.
ஆனால் ஒரிசா கந்தமாலில் சிலபல இந்தியர்கள் (இந்தியர்கள் தானே?) எரியூட்டி கொல்லப்பட்ட போதும் பதிவு போடணும்னு நினைத்து,பணிச்சுமையில் நீங்க பதிவு போட முடியாம போனத நெனச்சா வருத்தமா இருக்கு!
அப்படியே
சாதி மத இன உணர்வுகளைக் கடந்த மனித நேயத்தை போற்றுகிற, தீவிரவாதத்தை மறுக்கிற கூட்டத்தை
சேர்ந்த மாலன் அய்யாவிற்கும் அந்த நேரத்தில் வேறு வேலை இருந்திருக்கும்.
அனானி நண்பரே,
உணர்வு பகிர்தலுக்கு நன்றி. பெயரிலி அண்ணனின் மறுமொழியையும் பார்க்கவும்!
Anony,
What you are telling is quite true. No one in the cabinet has any real power and everything is done at the behest of the Italian madame !!!
பரிசல்காரன்,
அரசு ஒரு பதிலும் சொல்லாது. அடுத்த குண்டு வெடிப்பின்போது மீண்டும் வீரமாகப் பேசுவார்கள், பயங்கரமாக கண்டனமும் தெரிவிப்பார்கள், அவ்வளவு தான் :(
பெயரிலி அண்ணே,
என்னை "போட்டுத் தாக்குவது" என்ற தீர்க்கமான முடிவெடுத்து விட்டீர்கள் போல் தெரிகிறது.
//குஜராத்தின் மோடியின் சட்டத்தைப் பாலா சாட்டடீடு சாட்டாக இதே பதிவிலே எவ்விதமான வெட்கமுமின்றி ஆதரிப்பதுபோலத்
//
மோடியின் இந்த சட்டம் தேவை என்று சொல்வதால், அவர் உத்தமர் என்பது என் எண்ணமாகாது என்பதையாவது புரிந்து கொள்வீர்கள் தானே ? :(
//
குஜராத், காஷ்மீர், மணிப்பூர் அரச, இந்துத்துவா வன்முறை குறித்து பாலா என்றேனும் அன்புடன் எழுதி நான் பார்க்கவில்லை.அதுதான் இங்கே உறுத்துகிறது.
//
ஐயா, நீங்கள் பார்க்கவில்லை என்றால் நான் என்ன செய்ய முடியும், சொல்லுங்கள் ? குஜராத் வன்முறை குறித்தும், பொதுவாக சகிப்புத்தனமையற்ற சூழல் குறித்தும், ஏன் புலிகள் பற்றியும், இன்னும் பல குறித்தும் கூட எழுதித் தான் இருக்கிறேன். கீழே சிலவற்றை சுட்டியிருக்கிறேன், உங்கள் வசதிக்காக !
http://balaji_ammu.blogspot.com/2007/11/star3.html
http://balaji_ammu.blogspot.com/2007/12/star7.html
http://balaji_ammu.blogspot.com/2007/12/star11.html
http://balaji_ammu.blogspot.com/2008/04/429.html
http://balaji_ammu.blogspot.com/2005/05/wanted.html
http://balaji_ammu.blogspot.com/2007/12/star5.html
http://balaji_ammu.blogspot.com/2006/11/blog-post_25.html
http://balaji_ammu.blogspot.com/2006/08/vs.html
அதோடு, (உங்களை திருப்திக்க) எல்லாவற்றை பற்றியும் எழுத முடிவதில்லை. வீடு, பணி தாண்டி நேரமிருக்கும்போது எழுத முடிகிறது! இது கூட நீங்களே ஒரு முறை சொன்னது தான் !!!
யு.எஸ்.தமிழன்,
சிந்திக்க வைக்கும் கருத்துகள் !
//நம்ம வூடு எரியும் போது கூட சொரனை இல்லைன்னா இதப்பத்தி எழுதுவதுக்கூட நேரத்த வீணாக்குவதுபோல்தான்!
//
சரி தான், அதுக்காக ஈராக்கில் அமெரிக்கா செய்து வரும் அராஜகம் பற்றிய எதிர்கருத்தை வெளிப்படுத்தக் கூடாதா என்ன ?
balachandar muruganantham,
தீவிரவாதத்தை பொருத்தவரை, நாம் மிகவும் அவலமான ஒரு சூழலில் இருக்கிறோம் என்பது தான் உண்மை.
அனானி,
//பெங்களூர், அகமதாபாத் ஆகிய இடங்களில் குண்டு வெடித்த போதும், ஒரிசாவில் தேவாலயங்கள் எரிக்கப்பட்ட போதும் நீங்கள் (மற்றும் உங்களைப்போன்ற மெத்தப்படித்தவர்கள்) துப்பு கெட்ட என்ற வார்த்தையை பயன் படுத்தியதாக ஞாபகம் இல்லையே.
//
கடந்த இரண்டு முறை பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டும், உருப்படியாக ஒரு எழவும் அரசு செய்யத் துணியாத போதே, "துப்பு கெட்ட" என்ற சொல்லை பயன்படுத்த வேண்ட்டியிருந்தது !!!
மேலும், தேவாலயங்களை எரித்ததை நான் சரி என்று எங்கும் சொல்லவில்லை, அதோடு ஒரிஸாகலவரத்தின் பின்னணியில் பலப்பல பிரச்சினைகள் உள்ளன என்பதை தங்களைப் போன்ற மெத்தப் படித்தவர்கள் அறியாதது ஆச்சரியத்தை அளிப்பதாக உள்ளது !!! ஒரிஸா விஷயத்தை ஓர் எளிமையான பிரச்சினையாக அணுக முடியாது என்பது தான் யதார்த்தம் !
எ.அ.பாலா
Excellent article Bala. I do get a feel that the central govt is doing "nothing" about tackling this growing menance of terrorism across the country. They were worried about saving themselves a month back and now to get the nuclear deal through. Bomb blasts have been happening almost at a regular schedule. Now the only metro which is left in the list is Chennai. Wondering a day would come when terrorism might attack chennai as well.....
நேற்று நான் உங்கள் வீட்டுக்கு வந்தபோது பார்த்த செய்தியில் மூன்று இடங்களில் மட்டுமே குண்டுகள் வெடித்திருந்தன. அங்கிருந்து கிளம்பி வீட்டுக்கு வருவதற்குள் குண்டு எண்ணிக்கை ஐந்தாகி விட்டது.
தீவிரவாதத்தை அடக்கும் சட்டம் போடுவது என்பதையே இசுலாமியருக்கு விரோதமான போக்கு போல சித்தரிக்கும்போதே பாதி யுத்தம் தோற்று விட்டது. குஜராத்தில் மோடி மாநில அளவில் சட்டம் கொண்டுவர முயன்றபோது அதை எதிர்த்து கோர்ட்டுக்கு போனதில் காங்கிரசாரின் தீவிரவாத ஆதரவு நிலை பளிச்சிட்டது.
சோ அவர்கள் கூறுவதுபோல கடுமையான சட்டங்கள் தீவிரவாதிகளுக்கு துணை போகிறவர்களையாவது கட்டுப்படுத்தும். இப்போது நிலை என்னவென்றால் பார்லிமெண்டில் குண்டு போட்டவனுக்கு பாரத ரத்னாவே கொடுத்து விடுவார்கள் போலுள்ளது.
நடுவில் பெயரிலி அவர்கள் சைக்கிள் கேப்பில் ஆட்டோ ஓட்டுகிறார். இருப்பினும் அவருக்கும் பதில் கூறுவேன். புலிகள் துரோகிகள். உண்ட வீட்டுக்கு இரண்டகம் நினைப்பவர்கள். அவர்களை அடக்கும் எந்த செயல்பாடும் வரவேற்கத்தக்கதே.அவர்களை எண்பதுகளின் ஆரம்பித்திலிருந்தே அடையாளம் கண்டு கொண்டு நாட்டு மக்களை எச்சரித்தவர் சோ.
அன்புடன்,
டோண்டு ராகவன்
பாலா,
நான் யூ.எஸ் தமிழன் கருத்தோட ஒத்துப்போகிறேன்.. பல அரசுகள் மாறினாலும் தீவிரவாதத்துக்கு எந்த அரசும் ஒரு கடுமையான நடவடிக்கை எடுக்க மாட்டேங்குறதை தான் ரொம்ப கஷ்டமா இருக்கு ;((.. இன்னும் எம்முட்டு நாள் தான் இது மாதிரியே இருக்க போறானுங்கன்னு தெரியலை..
//கடந்த இரண்டு முறை பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டும், உருப்படியாக ஒரு எழவும் அரசு செய்யத் துணியாத போதே, "துப்பு கெட்ட" என்ற சொல்லை பயன்படுத்த வேண்ட்டியிருந்தது !!! //
2002ல் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்பட்ட பின்னரும், அதை கொன்றவர்கள் நாங்கள் தான் கொன்றோம் என்று பகிரங்கமாக கூறிய பின்னரும் நடவடிக்கை எடுக்காத மோடி (அதாவது குற்றவாளி யார் என்று தெரிந்த பின்னர் கூட நடவடிக்கை எடுக்க துப்பில்லாத மோடி) அடுத்தவரை குறித்து கூறுவது வெட்கக்கேடு
ஒரிசாவில் பாதிரியார் உயிருடன் எரிக்கப்பட்ட பின்னரும் சிறுபாண்மையினருக்கு பாதுகாப்பு அளிக்க இயலாத துப்பு கெட்ட ஒரிசா அரசை பற்றி உங்கள் கருத்தென்ன
//மேலும், தேவாலயங்களை எரித்ததை நான் சரி என்று எங்கும் சொல்லவில்லை,//
தவறென்றும் சொல்வில்லையே
அது போல் டெல்லி அரசு குறித்தும் நீங்கள் இது போன்ற சொற்களை கூறாமல் இருந்திருக்கலாமே
// அதோடு ஒரிஸாகலவரத்தின் பின்னணியில் பலப்பல பிரச்சினைகள் உள்ளன என்பதை தங்களைப் போன்ற மெத்தப் படித்தவர்கள் அறியாதது ஆச்சரியத்தை அளிப்பதாக உள்ளது !!!//
இருக்கின்றன
1. மதவாத பா.ஜ.காவின் தேர்தல் திட்டம்
2. தீவிரவாத கும்பலாம் வி.ஹச்.பின் பாசிஸம்
எங்களுக்கு நன்றாக தெரியும்
//ஒரிஸா விஷயத்தை ஓர் எளிமையான பிரச்சினையாக அணுக முடியாது என்பது தான் யதார்த்தம் !//
ஆனால் அப்படி அணுகும் துப்பு கெட்ட ஒரிசா அரசு பற்றி உங்கள் கருத்தென்ன
//தீவிரவாத மிருகங்களுக்கு எதிராக கண்டனம் தெரிவிப்பதில் யாதொரு பயனும் இல்லை என நான் நினைத்ததால் தான் அதை விட்டு விட்டேன் :(//
ஏதோ ஒரு காரணம்.
பொதுவாகவே, We refrain from calling a spade a spade. இதற்கும் பல காரணங்கள் - எனக்கும் சேர்த்தே...
பாலா
குண்டு வெடிப்பு கண்டிக்கப்பட வேண்டிய விஷயம்தான்.அதனால் அப்போதைக்கு பதவியில் இருக்கும் அரசாங்கத்தின் மேல் ஒரு கோபம் எழுவதும் இயற்க்கைதான்.
ஆனால் அணு ஆயுத ஒப்பந்தம் போடுவதை இதனுடன் ஒப்பிட்டு குறை சொல்ல முடியுமா என்பது சிந்திக்க வேண்டிய கருத்து.
///அதை நீங்களோ உங்க 'சோ'க்கான துக்ளக் ப்ரெண்டுகளோ கண்டு கொள்ளமாட்டீர்களா? ////
பெயரிலி உங்க மேல ரொம்ப காண்டா இருக்காரு போலத் தெரியுது :) அவரு சொல்ரதையும் ஆதரிச்சு/எதுத்து ஒரு பதிவு போட்டுருங்களேன்.
பாலா சார்,
தம்மால் துப்பு உள்ள அரசைத் தர இயலும் என்று சொல்லிக் கொள்ளும் தகுதியை பாஜக-வின் முந்தைய ஆட்சி ஒன்றும் நிரூபித்து விடவில்லை.
பதைக்க வைக்கும் தீவிரவாதச் செயல் நடைபெறும் தருணங்களில் அதனைத் தேசத்துக்கு எதிரான செயலாகக் கருதி எதிர்கொள்ளாமல், அதிலும் அரசியல் ஆதாயம் காண முயலும் செயல் ஆரோக்கியமானது அல்ல.
/வீடு, பணி தாண்டி நேரமிருக்கும்போது எழுத முடிகிறது! இது கூட நீங்களே ஒரு முறை சொன்னது தான் !!!/
மாற்றுக்கருத்தில்லை. ஆமோதிக்கிறேன்.
டோண்டு நரசிம்மன் சார்,
சைக்கிள் கேப்பிலே ஆட்டோ ஓட்டுவது லொட்டோ குலுக்குவதெல்லாம் போலி விவகாரத்தை வைத்து நீங்கள் இரண்டு ஆண்டுகள் படுத்துக்கொண்டே விரலையாட்டி ஆட்டோ ஓட்டியதைத் தூரத்திலேயிருந்து மேல்ஜாதி துரோணாச்சாரியை வேட்டுவ ஏகலைவன் பார்த்துக் கற்றுக்கொண்டதுதான். காணிக்கையாகக் கட்டைவிரலைக் கேட்டாலும் தருகிறேன். கணணியிலே தட்ட மிச்சவிரல் போதும் ;-)
அதுசரி; இப்போதும், ஈழ அகதிகளுக்கு வருமானத்துக்கு மொழிபெயர்க்கிறீர்களா? நல்லது. இங்கே நான் எங்கே புலியைப் பற்றிப் பேசினேன் என்று தேடிப்பார்த்தேன். காணவில்லை. எத்தனை நாட்களுக்குப் பெயரோடு வரும் வடகலைகளும் பெயரில்லாமல் வரும் தென்கலைகளும் வாசிக்கின்றவர்களுக்குப் புலிப்பூச்சாண்டியைக் கிளப்பிக்கொண்டே கேப்பிலே புழுவினைக் கிளறுவீர்கள்? நான் பாலாவிற்குச் சொன்னதிலே உள்ளதெல்லாம், இந்திய அரசு இலங்கைத்தமிழர்களைக் கொல்ல வாய்ப்பாக, ஸ்ரீலங்கா அரசுக்கு இராணுவ உதவி செய்வதைத்தான். அப்படியாகச் சாகிற மக்களின் மைத்துனன், மைத்துனி, அத்திம்பேர், அல்வாத்துண்டு, அவித்தகடலைகள்தான் உங்களுக்கு ஜேர்மன் மொழியிருந்து சென்னைத்தமிழிலே மொழிபெயர்க்கச் சன்மானம் தந்துபோக வருகின்றவர்களேயொழிய, விடுதலைப்புலிகளல்ல என்று நீங்களூம் இத்தனை நாள் நம்புகிறீர்கள் என்று நான் நம்புகிறேன்.
வரப்புடைய...
மேலும், குருமூர்த்தி, ஒரிஸா பற்றி துக்ளக்கிலே எழுதுவதை வாசிக்கின்றீர்கள் என்றும் நம்புகிறேன்.
நிற்க; இங்கே தலைப்புக்குச் சம்பந்தமில்லாமல், விடயம் திசைமாறுவதை விரும்பவில்லை. இங்கே -மீண்டும், இந்தியாவிலே எல்லாவகையான பயங்கரவாதத்தினாலும் இறந்த சம்பந்தமற்ற சீவன்களோடு சம்பந்தப்பட்டவர்களுக்கு என் வருத்தத்தை, நிலையை நெருக்கமாக உணர்ந்தவன் என்றளவிலே தெரிவித்து- நிறுத்திக்கொள்கிறேன்.
Vijay badri,
Thanks for sharing your views here.
ராகவன் சார்,
கருத்துக்கு நன்றி. கடுமையான சட்டமும், நல்ல இண்டெலிஜன்ஸும் முக்கியத் தேவைகள்.
சந்தோஷ்,
பொதுவா யாருமே திடமான முடிவு எதுவும் எடுப்பதில்லை, இந்திரா போன்ற பிரதமர் நம் நாட்டுக்குத் தேவை !
ஒரிஸா பற்றிப் பேசிய 2 அனானி நண்பர்களுக்கு:
உங்களுக்காக எல்லா விஷயங்களுக்கும் கருத்தும் கண்டனமும் தெரிவிப்பது
பிராக்டிகலா சிரமமானது. "இதப் பத்தி எழுதின நீங்க அதப் பத்தி ஏன் எழுதல?" அப்படின்னு கேட்டா என்னத்த சொல்றது ?
ஒரிஸா விவகாரத்தை நீங்கள் கெட்டியாக பிடித்துக் கொண்டிருப்பதால், ஒன்று சொல்கிறேன். மதம் மாற்றுவது தான் அங்குள்ள அடிப்படை பிரச்சினை. பல வருடங்களாக கனன்று கொண்டிருக்கும் பிரச்சினை இந்த தடவை பெரிய அளவில் வெடித்துள்ளது.
(மதம் மாறிய) கிறித்துவர்களுக்கு இடஒதுக்கீடு இல்லை என்று சட்டம் சொல்வதால், அவர்கள் பழங்குடி அந்தஸ்து கேட்கிறார்கள், அதை இந்து பழங்குடியினர் கடுமையாக எதிர்க்கின்றனர். அதனால், பிஜேபி மட்டுமே அனைத்துக்கும் காரணம் என்று கூற முடியாது !!! ஒரிஸா அரசு இன்னும் சற்றே திடமாக செயல்பட்டு கலவரத்தை கட்டுப்படுத்தியிருக்க வேண்டும்...
தருமி ஐயா,
மீள்வருகைக்கு நன்றி. OK, I will call a spade a spade from now on !
சங்கர்,
இந்த அணுஆயுத ஒப்பந்தக் கூத்து தாங்க முடியாமல் உள்ளது. அதனால் தான் அப்படி எழுதினேன். பெயரிலிக்கு என் மேல் காண்டெல்லாம் இல்லை என்பதே என் எண்ணம் !! அவரவர் கருத்து அவரவருக்கு...
ரத்னேஷ்,
பிஜேபி பெட்டரா, காங்கிரஸ் பெட்டரா என்பதல்ல என் கேள்வி ! தற்போதுள்ள அரசு தீவிரவாதத்தை ஒடுக்க சரியான வழியில் செயல்படவில்லை என்பதை இந்த ஆண்டில் 4 நகரங்களில் நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்புகள் எடுத்துக்
காட்டுகின்றன, அவ்வளவு தான் மேட்டர் !
எ.அ.பாலா
//அநாமதேயம் நன்றி.
இன்னமும் "ரமணீதர", "சிங்களர்" என்றுதானா எழுதுகின்றீர்கள்? புலி+பாஸ்போர்ட்+காழ்ப்பு; சரி. நல்லது.
சோ ராமசாமி அரச பயங்கரவாதத்தை எதிர்த்திருக்கிறாரா? அடடா கண்ணைத் திறந்திருக்க்கின்றீர்களே?பெரியண்ணர்கள் சொன்னால், சரி.
//
பெயரிலி,
ரமனீதர கந்தையா என்ற உங்கள் பெயரை வைத்துதான் விளித்தேன். எங்கே 'சிங்களர்' என்று வந்திருக்கிறது என்று தெரியவில்லை. எதற்காக அதை இப்பொழுது நுழைக்கிறீர்கள் என்றும் தெரியவில்லை? நீங்கள் சுவாஹிலி பேசும் இந்தோனேசியராக இருந்தாலும் சரி, புரியாத மொழி பேசும் 'மாய' இனத்து பழங்குடியினராக இருந்தாலும் எனது பதிலில் ஒரு வித்தியாசமும் இருக்காது.
'சோ' துக்ளக் ஆண்டுவிழா மேடையில் ஈழத்தமிழர் அரசு பயங்கரவாதத்தை எதிர்த்துப் பேச வைத்தது மட்டுமின்றி சிங்கள அரசுப் பயங்கரவாதத்தை கண்டித்தும் பேசினதை நேரில் இரு கண்களால் பார்த்திருக்கிறேன். நிற்க.
பாலாஜி குஜராத் பற்றி எழுதியிருக்கலாம் அல்ல எழுதாமல் இருந்திருக்கலாம். காஷ்மீரத்துப் பற்றி எழுதியிருக்கிறலாம். சுட்டிகள் பல கொடுத்திருக்கிறார். நான் படித்ததில்லை.
ஐயா.... ஒரு குண்டுவெடிப்பு நடக்கும்போது அந்த காட்டுமிராண்டிச் செயலைக் கண்டிக்கக்கூட அரசியல் பார்க்கும் நிலையில் தான் இருக்கிறோம்.
தேசியத்தை விடுங்கள். மனிதராக கூட இருக்க தகுதியில்லாமல் போய்க் கொண்டிருக்கோம்.
இதையொட்டி ஒரு பதிவு போட்டிருக்கிறீர்கள் போல. தமிழ்மணத்தில் இருந்தது ஆனால் பதிவைப் பார்க்க வாய்ப்பு கிடைக்கவில்லை.
தயவுசெய்து உணர்ச்சிவயப்படாமல் இருங்கள். உங்களை யாரும் பிரித்து பார்க்கவில்லை இங்கே.
மீள்வருகைக்கும் விளக்கத்திற்கும் நன்றி.
இது வேறொரு அனானி, ஈழ அனானி
--
புலிகளின் பூட்டிய கதவுகள்
சுழி அம்மான் ரொரன்ரோ
வன்னியை நோக்கிய படைநகர்வில் அகதிகளாக்கப்பட்டிருக்கும் மக்களை புலிகள் கிளிநொச்சியில் தடுத்து வைத்திருப்பதை கண்டிக்க அனைவரும் முன்வரவேண்டும் அவர்கள் பாதுகாப்பாக விரும்பிய இடங்களுக்கு செல்ல மனித உயிர்களை நேசிக்கும் புலம்பெயர்நாடுகளில் உள்ள அனைத்து உள்ளங்களும் அந்த மக்களுக்காக குரல் கொடுக்கமுன்வரவேண்டும்;
1996ம் ஆண்டு இராணுவம் யாழ்குடாநாட்டை கைப்பற்றிக்கொண்டுவரும்போது இலட்சக்கணக்கான மக்கள் அகதிகளாகவெளியேறி கால்நடையாக யாழ்ப்பாணத்தில் இருந்து தென்மராட்சியை நோக்கி கொட்டும் மழைக்குள்ளால் இரவுநேரத்தில் யு-9;பாதையால் சென்றுகொண்டிருந்தபோது நாவற்குழிபாலத்திற்கு அருகில் வைத்து புலிகளின் காவல்துறையினரால் தடுத்துநிறுத்தப்பட்டனர். வீதியில் இருந்து மக்களை வயல்வெளிக்குள் உள்ள சேறும் சகதியுமான இடங்களில் வயோதிபர்கள் கர்ப்பிணித்தாய்மார் குழந்தைகள் எனறு கூட பார்க்காமல் மக்கள் இறக்கப்பட்டனர். சிறிது நேரத்தில் புலிகளின் வாகனங்கள் இரவோடு இரவாக யாழ்ப்பாணத்தில் இருந்து மூட்டை முடிச்சுக்களுடன் வன்னிக்கு தப்பிச்செல்வதற்காக வீதியால் வந்துகொண்டிருந்தது அந்த வாகனங்களில் புலிகளின் உறுப்பினர்கள் இராணுவத்தளபாடங்கள்;.யாழ்வைத்தியசாலை கட்டில்கள் உபகரணங்கள் உட்பட பொதுமக்களின் சொத்துக்கள் என்பன புலிகளால் எடுத்துச்செல்லப்பட்டன கிட்டத்தட்ட மூன்று மணித்தியாலமாக மக்களை குளிருக்குள் நிற்கவைத்தார்கள். எங்களுக்கு முன்னர் புலிகள் தப்பி ஓடுகிறார்கள் என மக்கள் ஆத்திரப்பட்டார்கள்.. இதற்கிடையில்; ஆத்திரம் கொண்ட மக்களால் புலிகளின் காவல்துறையினர் தாக்கப்பட்டனர். கால்நடையாக சென்ற மக்கள் சாவகச்சேரி முதல் பளைவரை பாடசாலைகளில் உறவினர்களின் வீடுகளில் தங்கினர். ஆனால் புலிகள் அங்கு அவர்களை நிம்மதியாக இருக்கவிடவில்லை. எல்லோரும் கட்டாயம் கிளாலிப்பாதை ஊடாக வன்னிக்கு எங்களுடன் வாருங்கள் விரைவில் மீண்டும் யாழ்ப்பாணத்தை பிடித்து விடுவோம் அப்போது நீங்கள் திரும்பிச் செல்லலாம் என வலுக்கட்டாயமாக தங்களுடன் மக்களை வன்னிக்கு வருவதற்கு நிர்ப்பந்தித்தார்கள். இராணுவம் தென்மராட்சியை நெருங்க அந்தப்புலிகளும் வன்னிக்கு ஓடித்தப்பி விட்டார்கள்.
யாழ்ப்பாணத்தில் புலிகளின் ஆட்சியில் குடாநாட்டைவிட்டு மக்கள் வெளியேறமுடியாதபடி பாஸ்முறை. நடைமுறை இருந்தது பாஸ்கிடைத்தாலும் சென்றவர் திரும்பி வருவார் என குடும்ப உறவினர் அவருக்காக பொறுப்பு (ஆள்பிணை) நிற்கவேண்டும் சாதாரண கூலிவேலை செய்பவர்களில் இருந்து அரசாங்க உத்தியோகத்தர்வரை மண்மீட்பு நிதி என குடும்பத்திற்கு இரண்டு பவுண் அதைவிட மதாமாதம்கட்டாய பணவசூலிப்பு இயக்கத்திற்கு பிள்ளைகளை பிடித்தல் இப்படியான புலிகளின் அடக்குமுறை இருந்தது இராணுவம் யாழ்ப்பாணத்தை கைப்பற்றிய உடன் மக்கள் புலிகளின்பின்னால் வன்னிக்கு செல்லவில்லை. கிட்டத்தட்ட நாலு இலட்சம் மக்கள் தென்மராட்சியில் இருந்து பின்னர் இராணுவகட்டுப்பாட்டு பிரதேசமான யாழ்ப்பாணத்திற்கு திரும்பிவிட்டனர். இதை ஏன் குறிப்பிடவேண்டியுள்ளது என்றால் இப்போது வன்னியில் உள்ள மக்கள் யாழ்மக்கள் அன்று பட்ட கஸ்டத்தை விட பல மடங்கு புலிகளால் போராட்டம் என்ற பெயரில் கடும் வேதனைகளை அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த புலிகளின் வன்னிச்சிறையில் இருந்து எப்படி வெளியேறலாம் என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கிறார்கள் சிலர்.உயிர் போனாலும் பரவாயில்லை வன்னியில் இருந்து குடும்பம் குடும்பமாக இரவோடு இரவாக இராணுவம் கைப்பற்றிய பகுதிக்குள் தப்பி வந்துகொண்டிருக்கிறார்கள்.
புலிகள் வெளிநாடுகளில் உள்ள தமிழர்களிடம் வன்னி அகதிகளை சாட்டாக வைத்து நிதிசேகரித்து வருகின்றார்கள் இந்தநிதி அந்தமக்களுக்கு போய்ச்சேராது என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம். அரசாங்கம்தான் அவர்களுக்குரிய உணவுப்பொருட்களை அனுப்பிக்கொண்டிருக்கிறது தொண்டர் நிறுவனங்கள் அகதிகளுக்கான இருப்பிடவசதிகளை கவனித்துக்கொண்டிருக்கிறார்கள். வெளிநாடுகளில் பொங்குதமிழ் போராட்டம் என்று புலிகளுக்கு பணம் கொடுத்து யுத்தத்தை ஊக்குவித்தவர்களின் உடன்பிறப்புகளும் இப்போது வன்னியில் அகதிகளாக்கப்பட்டிருக்கிறார்கள் இப்போது இவர்களுக்கு உள்ள பயம் என்னவென்றால் தமது உடன்பிறப்புக்களின் உயிர்பற்றியதுதான் ஏற்கனவே கட்டாயப்பயிற்சிக்கு பிடித்துச்செல்லப்பட்டவர்கள் பிணங்களாக பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்ட சம்பவங்களினால் வெளிநாடுகளில் உள்ள புலி ஆதரவாளர்கள் பலர் ஆத்திரத்தில் உள்ளனர். ஊரவன் பிள்ளைகள் யுத்தத்தில் மரணம் அடைவதற்கு காரணமாக இருந்தவர்கள் இப்போது இவர்களின் மடியிலும் புலிகள் கைவைக்கத்தொடங்கியதால் புலிகள் மீதுசீற்றம்கொண்டுள்ளதை கண்ணால் காணக்கூடியதாக உள்ளது வன்னியில் பாதுகாப்பாக இருக்கலாம் தலைவர் விடமாட்டார் என்ற மாயையில் இருந்தவர்களுக்கு இப்போதைய வன்னி நிலவரம் கலக்கத்தை கொடுத்துள்ளது. வெளிநாடுகளில் பொங்குதமிழ் போராட்டம் என்று போராட்டம் நடத்துபவர்கள் வன்னியில் உள்ள மக்களை அதாவது தமது உறவினர்களை வன்னியைவிட்டு வெளியேறுவதற்கு புலிகளை நிர்ப்பந்திக்க. போராட்டம் நடத்துவார்களா? புலிகள்; இந்த அகதிகளை வன்னியைவிட்டு வெளியேற அனுமதித்தால் அகதிகள்பிரச்சினைதானாகவே தீர்ந்துவிடும் ஆனால் புலிகள் இந்த அகதிகளை வெளியேறவிட்டால் வெளிநாடுகளில் பணம் சேகரிக்கமுடியாது கட்டாய பயிற்சிக்கு ஆள்பிடிக்கமுடியாதுஇராணுவம் கிளிநொச்சியை இராணுவம் நெருங்கினால் இந்திய இராணுவகாலத்தில் அகதிமுகாம்களுக்குள் மக்களோடு மக்களாக புலிகள் கலந்து இருந்ததுபோல இந்த அகதிகளுக்குள் அகதிகளாக இருந்து தப்பிக்கவும் தமக்கு நெருககடி ஏற்பட்டால் இந்த மக்களுக்குள் இருந்துகொண்டு படையினர் மீதுதாக்குதல்களை நடத்தி மக்களை மனிதகேடயங்களாக பயன்படுத்துவதற்காகவும் அகதிகளை வன்னியைவிட்டு வெளியேறவிடமாட்டார்கள்.
1996ம் ஆண்டு இராணுவம் யாழ்குடாநாட்டை கைப்பற்றிக்கொண்டுவரும்போது ஆயுதங்களுடன் இருந்த புலிகள் வன்னிக்கு மக்களுக்கு முன் தப்பி ஒடினார்கள். இப்போது மட்டும் யுத்தத்திற்கு இடையில் அகப்பட்டிருக்கும் அப்பாவிமக்களை வன்னியைவிட்டு வெளியேற அனுமதிக்காதது ஏன்?
==
//சைக்கிள் கேப்பிலே ஆட்டோ ஓட்டுவது லொட்டோ குலுக்குவதெல்லாம் போலி விவகாரத்தை வைத்து நீங்கள் இரண்டு ஆண்டுகள் படுத்துக்கொண்டே விரலையாட்டி ஆட்டோ ஓட்டியதைத் தூரத்திலேயிருந்து மேல்ஜாதி துரோணாச்சாரியை வேட்டுவ ஏகலைவன் பார்த்துக் கற்றுக்கொண்டதுதான். காணிக்கையாகக் கட்டைவிரலைக் கேட்டாலும் தருகிறேன். கணணியிலே தட்ட மிச்சவிரல் போதும் ;-)//
திடீரென போலியார் விஷயம் எங்கிருந்து வந்தது? இருக்கட்டும். அவ்வாறு இரண்டு ஆண்டுகள் விடாமல் சண்டை போட்டு ஒரு வழியாக தொல்லை முழுவதுமாக ஒழிந்ததா இல்லையா. எல்லா போலி வலைப்பூக்களும் அழிக்கப்பட்டனவா இல்லையா, உங்கள் பெயரில் வந்ததையும் சேர்த்து? அப்புறம் என்ன பிரச்சினை?
//அதுசரி; இப்போதும், ஈழ அகதிகளுக்கு வருமானத்துக்கு மொழிபெயர்க்கிறீர்களா?//
ஈழசகோதரர்களில் ஒருவருக்கு இலவசமாக மொழிபெயர்த்ததை பதிவாகப் போட்டதற்கு காரணமே அது என்னைப் பற்றி நானே நினைத்து பார்த்திருக்க முடியாத செயல் என்பதற்காகவே. மற்றப்படி மொழிபெயர்ப்பு என யார் வந்தாலும் காசு வாங்கித்தான் செய்வது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
மேலே உள்ள ஈழ அனானியின் பின்னூட்டத்தை (அதற்கு முன் சில ஈழப்பிரச்சினை சார்ந்த பின்னூட்டங்களை, பதிவுக்குத் தொடர்பில்லாதபோதும், நான் வெளியிட்ட காரணத்தால்) அனுமதிக்க வேண்டியதாயிற்று.
பதிவுக்குச் சம்பந்தம் இல்லாத பின்னூட்டங்களை தவிர்க்குமாறு நண்பர்களை கேட்டுக் கொள்கிறேன்.
/எங்கே 'சிங்களர்' என்று வந்திருக்கிறது என்று தெரியவில்லை. எதற்காக அதை இப்பொழுது நுழைக்கிறீர்கள் என்றும் தெரியவில்லை?/
நான் சொன்னது உங்களுக்குப் புரியவில்லையோ?
"சிங்களர்" என்று சொல்லியிருப்பது பொதுவாகவே இலங்கைப்பிரச்சனையிலே அரைகுறையாக மூக்கை நுழைக்கும் இந்தியர்களின் அறிவின்போதாமையைச் சுட்டுவதற்காகவே; "சிங்களவர்" என்றுதான் குறிப்பது வழமை. அவ்வளவுதான்.
//நீங்கள் மறைக்கும் புலிகளின் இரத்த வெறியையும், சிங்களர் மட்டுமல்லாது சகதமிழர்களையே தீர்த்துக் கட்டிய அதிகார வெறியையும் உரித்துக் காட்டியிருக்கிறார்கள்.// - இது நீங்கள் சொன்னது.
மேலும், தேவையில்லாமல், புலியை நுழைத்தது நீங்கள். எதற்காக அதை இங்கே நுழைப்பது பற்றி நான் கேட்கமுடியாது. காந்தி பிறந்த நாட்டு இந்தியராகவிருப்பதாலே நீங்கள் சொல்வதுதான் சரியாகவிருக்கவேண்டுமில்லையா? கேட்டுக்கொள்கிறோம்.
அவ்வளவுதான். பாலாவுக்குச் சொல்லவேண்டியதைச் சொல்லி, அவர் சொன்னதையும் கேட்டுக்கொண்டேன்; பெயருள் நீங்கள் யாரோ தெரியவில்லை. ஆனால், தொடருங்கள்
//இலங்கைப்பிரச்சனையிலே அரைகுறையாக மூக்கை நுழைக்கும் இந்தியர்களின் அறிவின்போதாமையைச் சுட்டுவதற்காகவே; "சிங்களவர்" என்றுதான் குறிப்பது வழமை. அவ்வளவுதான்.//
நன்றி. இலங்கைப் பிரச்சினையின் சிக்கல் தெரியாமல் மூக்கை நுழைத்துவிட்டேன் போல.
குண்டுவெடிப்புகளை கண்டிக்கும் போது 'சோ' இராமசாமியை கண்டிக்கலாம். மாலனை கண்டிக்கலாம். போகிற போக்கில் பாலாவை ஒரு இடி இடிக்கலாம். அட இங்கே பல விசயங்களின் மூலங்களை விவாதிக்கிறார்களே என்று தீவிரவாதத்தின் வேறு கோனங்களைச் சொல்ல வந்தால் 'அரைகுறை' பட்டம்.
//காந்தி பிறந்த நாட்டு இந்தியராகவிருப்பதாலே நீங்கள் சொல்வதுதான் சரியாகவிருக்கவேண்டுமில்லையா? கேட்டுக்கொள்கிறோம்.
அவ்வளவுதான்.//
என்னடா அண்ணன் இவ்வளவு நேரமாக இந்த 'பல்லவி'யை பாடாமல் இருக்கிறாரே என்று நினைத்திருந்தேன்.
// பெருமளவு பாதிப்புக்கு ஆளான குஜராத்தில் மோடி தீவிரவாதத்தை ஒடுக்க எடுத்து வந்திருக்கும் சட்டத்தை எதிர்த்து நீதிமன்றத்துக்கு சென்றுள்ள கேவலமான செயல் குறித்து என்ன சொல்வதென்று தெரியவில்லை !!!// - ஒரு தீவிரவாதி எப்படி தீவிரவாதத்தை ஒழிக்க முடியும்? மேலும் ஒரு சட்டத்தை வைத்து எப்படி தீவிரவாதத்தை ஒழிக்க முடியும்? தீவிரவாதிகள் எல்லாம் சட்டத்தைக் கண்டு பயந்து தீவிரவாதத்தை விட்டு விடப் போகிறார்களா? ஒரிசாவில் பயங்கரவாத செயல்களில் ஈடுபடும் காவி தீவிரவாதிகளுக்கு ஒரு காரணம் இருப்பது போல் ஆங்காங்கே குண்டு வைக்கும் தீவிரவாதிகளுக்கும் ஒரு காரணம் ஏன் இருக்கக் கூடாது? எந்தத் தீவிரவாதியும் தான் செய்யும் அடாவடிச் செயல்களுக்கு ஒரு காரணம் வைத்திருப்பான். ஆனால் காவி தீவிரவாதிகள் சொல்லும் காரணம் மட்டும் உங்களுக்கு சரியாகப்படுகிறது. இந்தியாவில் காவிகள் எந்த பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டாலும் அவர்கள் தேசபக்தர்கள். இந்த நிலை நீடித்தால் பயங்கரவாதம் வளருமே ஒழிய ஒரு நாளும் குறையாது. தீவிரவாதத்தில் எந்த மதத்தினர் ஈடுபட்டாலும் அதை குற்றமாக பார்க்கும் மன நிலை வர வேண்டும்.
//ஒரிசாவில் பயங்கரவாத செயல்களில் ஈடுபடும் காவி தீவிரவாதிகளுக்கு ஒரு காரணம் இருப்பது போல் ஆங்காங்கே குண்டு வைக்கும் தீவிரவாதிகளுக்கும் ஒரு காரணம் ஏன் இருக்கக் கூடாது?//
குண்டு வெடிக்கும்போதெல்லாம் திசைதிருப்ப வந்துவிடுகிறீர்கள்.
ஒரே ஒரு கேள்வி கேட்கிறேன். அதற்கு தெளிவான பதில் சொல்லுங்கள்.
பொடா போன்ற தீவிரவாத ஒழிப்பு சட்டத்தை எதிர்ப்பது யார்? RSS எதிர்க்கிறதா? அவர்களும் தீவிரவாதத்தை ஆதரிப்பவர்க்ள் என்றால் ஏன் பொடாவை ஆதரிக்க வேண்டும்.
நீங்களும், நீங்கள் வக்காலத்து வாங்கும் கூட்டமும் ஏன் கடுமையான தீவிரவாத சட்டத்திற்கு எதிர்ப்பாக இருக்கிறீர்கள்? தீவிரவாதம் தவறு என்றால் அதற்கு எதிரான சட்டம் ஏன் உங்களை உறுத்துகிறது?
அட ஒரிசாவில் கொலை செய்தவர்களை தூக்கில் போடுங்களேன். யாரையா வேண்டாம் என்கிறார்கள். எதற்காக பாராளுமன்றத்தை தாக்கியவர்களுக்கு வக்காலத்து வாங்குகிறீர்கள்?
இதெல்லாம் ஒரு பொழப்பாய்யா....
//குண்டு வெடிக்கும்போதெல்லாம் திசைதிருப்ப வந்துவிடுகிறீர்கள்.// குண்டு வெடிப்பது மட்டும்தானே உங்கள் காதில் விழுகிறது. ஏன் காவிகளின் அட்டூழியம் பெரிதாகத் தெரிவதில்லை?
//பொடா போன்ற தீவிரவாத ஒழிப்பு சட்டத்தை எதிர்ப்பது யார்? RSS எதிர்க்கிறதா? அவர்களும் தீவிரவாதத்தை ஆதரிப்பவர்க்ள் என்றால் ஏன் பொடாவை ஆதரிக்க வேண்டும்.// - பொடாவால் எத்தனை காவிகள் பாதிக்கப்பட்டார்கள்? பொடா சட்டம் மோடி போன்ற பயங்கரவாதிகளுக்கு அப்பாவிகளை பழிவாங்க நல்ல ஆயுதம்.
//தீவிரவாதம் தவறு என்றால் அதற்கு எதிரான சட்டம் ஏன் உங்களை உறுத்துகிறது?// தீவிரவாதிகளுக்கு எதிரான சட்டம் தீவிரவாதத்தை எதிர்ப்பவர்களால் மட்டும் பயன்படுத்தப் படவேண்டுமே ஒழிய மோடி போன்ற காவி பயங்கரவாதிகளால் அல்ல.
//அட ஒரிசாவில் கொலை செய்தவர்களை தூக்கில் போடுங்களேன். யாரையா வேண்டாம் என்கிறார்கள். // - அடே உங்கள் கூட்டந்தானையா அவர்களை தேசபக்தர்கள் என்று கொண்டாடுகிறார்கள். இங்கே மட்டும் எதற்கு இந்த நடிப்பு?
//எதற்காக பாராளுமன்றத்தை தாக்கியவர்களுக்கு வக்காலத்து வாங்குகிறீர்கள்?// - கண் குருடாகிவிட்டதா என்ன? நான் எங்கையா வக்காலத்து வாங்கினேன். மீண்டும் ஒருமுறை கண்ணில் விளக்கெண்ணை விட்டு நான் எழுதியதை படித்து பாரும்.
//இதெல்லாம் ஒரு பொழப்பாய்யா....// - தன் பெயரை சொல்லக் கூட துணிச்சல் இல்லாமல் பெயரில்லா பிச்சையாக வந்து உளரும் உமக்கெலாம் இப்படி ஒரு கேள்வி தேவை தானா?
காவி பயங்கரவாத இயக்கங்களின் தீவிரவாத செயல்பாடுகளும், பகிரங்க மான ஆயுத புழக்கமும் அரசு இயந்திரங்களின் மௌனமும் பயங்கர வாதத்தை ஊட்டி வளர்த்திருக்கிறது.
இதனால் ஏற்பட்ட தீய விளைவுகள், இன்னொரு தரப்பிலிருந்து விரக்தி யாளர்களை உருவாக்கி, அவர்களில் சிலரை தீவிரவாதத்தின் பக்கம் நகர்த்தி விட்டிருக்கிறது.
இந்தியாவின் ராணுவ பலமும், தொழில் வளர்ச்சியும், கணிணி துறை யின் அசுர முன்னேற்றமும் பல நாடுகளை பொறாமை கொள்ள வைத் திருக்கிறது. அவர்களது தூண்டுதலிலும் பயங்கரவாதத்தின் கோரக்கரங்கள் நுழைந்திருக்கின்றன.
இதுதவிர, அமெரிக்காவில் செப்-11 தாக்குதலை நடத்தி அமெரிக்காவுக்கும், முஸ்லிம் உலகுக்கும் இடையில் மோதலை யூதர்களின் மொசாத் உளவுத்துறை உருவாக்கியது.
அதே குழுதான் இந்தியாவை முஸ்லிம் உலகிற்கு எதிராக திருப்பவும் இந்திய பெரும்பான்மை மக்களுக்கும், சிறுபான்மை மக்களுக்கும் இடையில் நிரந்தர பகையை உருவாக்கவும் திட்டமிட்டு பயங்கர நாசவேலையை அரங்கேற்றி வருவதாக கூறப்படுகிறது.
இதை நிரூபிக்கும் வகையில் மொசாத்தின் ஏஜெண்டுகளும், காவி இந்துத்துவ பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்களும் அமெரிக்காவில் நடத்தும் சந்திப்புகளும் திட்டமிடல் களும் இருக்கின்றன.
உளவுத்துறை பல்வேறு அமைப்பு களாக இயக்கப்படுகிறது. அவர்களுக் குள் ஒருங்கிணைப்பு இல்லை. 'ஈகோ' தலை விரித்தாடுகிறது.
இந்தியாவில் நடைபெறும் குண்டு வெடிப்புகள் குறித்து மர்மங்கள் நீடிக்கின்றன. ஆனால், குண்டு வெடித்த சில மணி நேரங்களில் சந்தேக விழிகள் முஸ்லிம்களையே சுற்றி வலம் வரத் தொடங்குகிறது.
இதனால் உண்மை குற்றவாளிகள் தப்பி விடுகின்றனர்.
துயரச் சம்பவங்கள் நடைபெறும் போதெல்லாம், மீடியாக்களுக்கு பதில் சொல்ல வேண்டும் என்பதற்காக அவசரலிஅவசரமாக பலர் கைது செய்யப்படுகிறார்கள். வேகமாக தொடங்கும் விசாரணைகள் ஓரிரு மாதங்களில் இருட்டறைக்கு கொண்டு போகப் படுகிறது.
கடந்த 5 ஆண்டுகளில் பல குண்டு வெடிப்புகள் நடந்துள்ளன. அவற்றின் மீது தொடங்கப்பட்ட விசாரணைகள் என்னவாயிற்று? எத்தனைப் பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப் பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டனர்? எத்தனைப் பேர் ஆதாரங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்? ஜாமீன் பெற்றவர்கள் எத்தனைப்பேர்? விசார ணைகளின் இன்றைய நிலை என்ன? விசாரணைகள் ஒரு சார்பாகலிகுறிப் பிட்ட இனத்தினை குறிவைத்து நடத்தப் படுகிறதா? வெளிநாட்டு உளவு அமைப்புகளின் தொடர்புகள் என்ன? சங்பரிவார் அமைப்புகள் விசாரிக்கப்பட் டனவா? என பல கேள்விகளுக்கு பதில் இல்லை.
இது குறித்து விரிவானலிவிரைவான வெள்ளை அறிக்கை நாடாளுமன்றத் தில் சமர்ப்பிக்கப்படவேண்டும்.
பயங்கரவாதத்தின் உண்மையான முகம் தோலுரிக்கப்படவேண்டும். உண்மை குற்றவாளிகள் தண்டிக்கப் படவேண்டும். எனவே மத்திய அரசு வெள்ளை அறிக்கையை சமர்ப்பிப்பதில் தயக்கம் காட்டக் கூடாது.
இது அடுத்தடுத்த பயங்கர சம்பவங் களை தடுக்க உதவும் என்பதை மறக்கக் கூடாது.
அனானி,
உங்கள் கருத்துகளை முன் வைக்க உங்களுக்கு முழு உரிமை உண்டு என்றாலும்,
//இதுதவிர, அமெரிக்காவில் செப்-11 தாக்குதலை நடத்தி அமெரிக்காவுக்கும், முஸ்லிம் உலகுக்கும் இடையில் மோதலை யூதர்களின் மொசாத் உளவுத்துறை உருவாக்கியது.
//
என்று கூறியிருப்பது, உங்கள் கற்பனை வளத்தை அருமையாக எடுத்துக் காட்டுகிறது. செப்-11 தாக்குதலை நடத்தியதை பின் லேடனே ஒப்புக் கொண்ட பிறகு, நீங்கள் சொல்வது தவறான தகவல் !
General tendency of indians is to postpone doing things; not to take action; not having the will to act tough; believing in karma to handle everything; fear of change; firm belief that we cannot change; acting only when pushed to the wall; zero-value for human life;no belief in governance; believing government is meant for looting public exchequer; treating political parties as partnership companies; bogged down with internal conflicts; don't care about external conflicts; lack of vision for development; confusion over the national identity - india, a motley group of sub-nations joined by just the brown ass?
Indian, think; who are you? nation comes first, or the religion or the language or the caste.
With all these traits nurtured for centuries, BJP,Congress or Commies irrespective of the political flavor, non-action would be the hallmark of governments.
// பொடாவால் எத்தனை காவிகள் பாதிக்கப்பட்டார்கள்? பொடா சட்டம் மோடி போன்ற பயங்கரவாதிகளுக்கு அப்பாவிகளை பழிவாங்க நல்ல ஆயுதம்.//
ஏனய்யா ராபின், பொடாவை கொணர்ந்து மோடியை உள்ளே போட வேண்டியதுதானே? இப்போது உங்களின் ரோமன் கத்தோலிக்க ஆட்சிதானே நடக்கின்றது!!!
ஈழ தமிழர்கள் மீது இரக்கம் காட்டுவது யார்?
மக்களை பாதுகாக்க போராடுவதாக கூறியவர்கள், தம்மை பாதுக்காக்க மக்களை பயன்படுத்துகின்றனர்!
சிறந்த சிங்கள தேசிய வாதிகளாக தம்மை காட்ட முயலும் கோத்தா பயவும், சரத் பொன்சேகாவும்!
- அர்ச்சுனன்
சனிக்கிழமை (2008-09-27) பிற்பகல் 12 மணி 15 நிமிடம் அளவில் கிளிநொச்சி இரத்தினபுரம் பகுதி மீது சிறிலங்கா விமானப்படையினர்
மேற்கொண்ட தாக்குதலில் ஒரு பொதுமகன் கொல்லப்பட்டு 4 குழந்தைகள் உட்பட 8 பேர் காயம் அடைந்துள்ளதாக விடுதலை புலிகளின் ஆதரவு
இணைய தளங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன. தனது காயம் அடைந்த குழந்தையினை வைத்துக் கொண்டு அந்த தாய அலறும்
காட்சியானது, கண்ணால் பார்க்க முடியாத அளவிற்கு சோகமாக இருக்கின்றது. ஒருவர் கொல்லப்பட்ட போதும் காயம் அடைந்தவர்களின்
படங்களை பார்க்கின்ற போது பாரிய கொலை சம்பவம் நடந்தது போல புலிகளின் ஊடங்கள் அதனை காட்ட முனைந்திருக்கின்றன. புலிகள்
தெற்கில் கடந்த சில மாதங்களில் பேரூந்துகளிலும், வியாபார நிலையத்திலும் வைக்கப்பட்ட குண்டுகளில் பாடசாலைகள் மாணவர்கள் உட்பட
நூற்றுக்கு மேற்பட்ட சிங்களவர்கள் கொல்லப்பட்டார்கள். அந்த அப்பாவி மக்களின் மரணத்தில் எவ்வாறு சிங்கள அரசு அரசியல் லாபம் தேட
முற்பட்டதோ அதே போன்று விடுதலை புலிகளும் வன்னியில் சிக்குண்டுள்ள மக்களின் அழிவில் அரசியல் லாபம் தேட முனைவதினை பார்க்க
கூடியதாக உள்ளது. புலிகளின் இலத்திரணியல், அச்சு மற்றும் ஒலிபரப்பு ஊடங்கள் இதனை திறப்பட செய்து வருகின்றன.
இதேவேளை ஞாயிற்றுக்கிழமை (2008-09-28) பிற்பகல் மூன்று மணியளவில் விடுதலை புலிகள் இராணுவத்தினரை இலக்கு வைத்து
வவுனியா நகர் பகுதியில் குண்டு ஒன்றினை வெடிக்க வைத்ததில் ஒரு அப்பாவி பொதுமகன் கொல்லப்பட்டதுடன் இரண்டு பொதுமக்கள் படுகாயம்
அடைந்துள்ளனர். இதில் கொல்லப்பட்ட பொதுமகன் குறித்து புலிகளின் ஊடகங்களும் ஆதரவாளர்களும் கண்டு கொள்ளவில்லை. இந்த
உயிரிழப்பு குறித்து அவர்களுக்கு கவலையோ உணர்ச்சிகளோ வரவில்லை. சிறிலங்கா விமானப்படையினரின் தாக்குதலில் இருந்து
தப்பிப்பதற்காக விடுதலை புலிகள் தமது பிரதான பாதுகாப்பு இடங்களையும், ஆயுத கிடக்குகளையும் மக்கள் நெருக்கமாக வசிக்கும்
இடங்களிலேயெ வைத்திருக்கின்றனர். பாடசாலைகள் வைத்தியசாலைகள் ஆகியனவற்றிக்கு அருகில் தமது பாதுகாப்புக்களுக்காக புலிகளின்
உயர்மட்ட தலைவர்கள் தங்கியிருக்கின்றனர். இவர்களை இலக்கு வைப்பதற்காக விமானப்படையினர் விமானதாக்குதலை மேற்கொள்வதாக
கூறுகின்றனர். இரத்தின புரத்தில் இருந்த கடற் கரும் புலிகளின் பயிற்சி முகாமிற்கு வந்து போகும் புலிகளின் புலனாய்வு துறை பொறுப்பாளர்
பொட்டு அம்மானை தாம் இலக்கு வைத்தாக அரச விமானப்படையினர் தெரிவித்து உள்ளனர். எப்படி இருப்பினும் அப்பாவி பொது தமிழ்
மக்களின் உயிர் மீது எந்த தரப்பிற்கும் அக்கறை இருப்பதாக தெரியவில்லை.
ஈழ தமிழர்களின் விடுதலைக்காகவும் அவர்களின் பாதுகாப்பிற்க்காகவும் போராடுவதாக கூறி வரும் விடுதலை புலிகள் , தற்பொழுது தம்மை
பாதுகாப்பதற்காக அந்த அப்பாவி மக்களை தடுத்து வைத்து அவர்களை கேடயங்களாக பாவிக்கின்றனர். மக்களின் பாதுகாப்பே முதன்மையானது
என அவர்கள் நினைத்தால்,தமது உயிரை பாதுகாப்பதற்காக வன்னியை விட்டு வெளியேற விரும்பும் மக்களை அவர்கள் அனுமதிக்க வேண்டும்.
இதனை செயாது சிங்கள அரசு தமிழ் மக்களை கொன்று குவிக்கின்றது என கூறிகொண்டு, இன்னமும் அந்த மக்கள் பலர் அழிய வேண்டும்,
அதில் அரசியல் லாபம் பெறவேண்டும் என புலிகள் நினைக்கின்றனர். யாழ்பாணத்தினை கைப்பற்றுவதற்காக அரச படைகள் முதன் முறையாக
ஆட்டிலறி தாக்குதலை மேற்கொண்டவாறு 1994 ஆம் ஆண்டு பலாலியில் இருந்து புறப்பட்ட போது அதனை தாக்கு பிடிக்க முடியாத புலிகள்
தம்மை பாதுகாப்பதற்காக மக்களை பலவந்தமாக தம்மோடு அழைத்து கொண்டு சென்று இருந்தனர். திடீரென மக்களை வெளியேறுமாறு
புலிகள் கட்டளை இட்ட போது மக்கள் பட்ட துன்பத்தினை சொல்லில் கூற முடியாது.
தமிழ் மக்களின் பாதுகாவலானாக தன்னை காட்டிக் கொள்ளும் விடுதலை புலிகள் தம்மை பாதுகாப்பதற்காக மக்களை பயன்படுத்திய
சம்பவங்களே அதிகமாகும். இந்திய படையினருடன் ஆன மோதலில் போது , மக்கள் தஞ்சம் அடைந்து இருந்த பாடசாலை கட்டிடங்களில்
இருந்தும், கோவில்களின் கோபுரங்களில் இருந்தும் தாக்குதலை மேற்கொண்டுவிட்டு புலிகள் தப்பி சென்று இருந்தனர். தாக்குதல் வந்த
திசையினை நோக்கி இந்திய படையினர் மறுதாக்குதல் நிகழ்த்திய போது பலியானவர்கள் அப்பாவி மக்களே ஆவர்.புலிகளின் பிடியில் இருந்து
மக்களை விடுவிப்பதற்கான தாக்குதல் என கூறிக்கொள்ளும் அரசும், ஈழத்தமிழர்களை பாதுகாப்பதாக கூறிக்கொள்ளும் புலிகளும் தமது
நலன்களை பேணிப்பாதுகாப்பதற்காக அப்பாவி இளைஞர்களை பலியாக்கி வருகின்றனர். இராணுவத்தில் இருக்கும் சிங்கள இளைஞர்களை
உசுப்பேத்துவதற்காக இராணுவ தளபதி சரத் பொன்சேகா இலங்கை சிங்களவர்களின் நாடு ,சிறுபான்மை இனத்தவர் எதனையும் பேரம் பேச
முடியாது என கூறியிருக்கின்றார். அரசியலுக்கு வரும் ஆர்வம் அவரின் பேச்சில் தெரிகின்றது.
புலிகளுக்கோ தமிழர்களின் தலைமை வேண்டும், அரசிற்கோ அடுத்த ஆறு ஆண்டு ஆட்சி வேண்டும், தமிழக தலைவர்கள் சிலருக்கும்,
திரைப்பட கலைஞர்கள் சிலருக்கும் புலிகளின் ஊக்குவிப்பு தொகை வேண்டும், இந்தியாவிற்கு பிராந்திய தலமை வேண்டும். இப்படியாக
இவர்கள் எல்லோரும் தமது நலன்களிற்கு ஊடாகவே ஈழ தமிழர்களின் போராட்டத்தினை பார்த்து வருகின்றார்கள். ஈழ தமிழர்களின் விடுதலை
போராட்டம் இவர்களின் நலன் சார்ந்த பார்வையினால் சின்னா பின்னப்பட்டு போயிருக்கின்றது.தமிழ் ஈழம் கேட்டு போராடிய மக்கள் தலைநகரில்
தஞ்சம் அடையும் அளவிற்கு விடுதலை புலிகளின் யுத்த தந்திரோபாயம் இருந்திருக்கின்றது.இந்தியாவினால் இணைத்து வைக்கப்பட்ட வடக்கு
கிழக்கு மாகாணங்களை பிரித்து வைத்த பெருமை புலிகளுக்கே உரியது. தமிழர்களின் தாயக பிரதேசமான திருமலை பறிபோகின்றது என
திருமலை பாராளமன்ற உறுப்பினர் இராசவரோதயம் சம்மந்தர் உட்பட பலர் கதறி வருகின்றனர். வட கிழக்கு மாகாணத்தின் முதல் முதல்வரான
வரதராஜபெருமாளின் தலமை அலுவலகம் அந்த திருகோணமலையிலேயெ இருந்தது என்பதினை அவர்கள் தெரிந்திருந்தும், வேண்டும் என்று
விளங்காதது போல் நடிக்கின்றனர் . அதனை அன்று சம்மந்தர் உட்பட புலிகள் ஏற்று இருந்தால் , இன்று வட கிழக்கு இணைந்த மாகாண அரசு
ஒன்று தமிழர்களுக்கு இருந்திருக்கும். அதேவேளை இலங்கை சிங்களவர்களின் நாடு என சரத்பொன்சேகா கூறுவதற்கு இடம் இருந்திருக்காது.
இந்தியா தனது பிராந்திய நலன்களுக்கு ஊடாக இலங்கை பிரட்சனையினை அனுகிய போதும், ஈழ தமிழர்களுக்கு ஒரு போதும் துரோகம்
இழைக்க முனைந்தது இல்லை. சிங்கள அரசுகள் எவையும் தாமாக முன்வந்த தமிழர்களின் பிரட்சனையினை தீர்க்க முன்வந்தது இல்லை.
அப்படி இருந்த வேளையில் அன்றைய இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி அவர்கள் உணவு பொதிகள் போடும் சாக்கில் அந்த விமானங்களுக்கு
பாதுகாப்பாக யுத்த விமானங்களை அனுப்பி வைத்து அன்றைய இலங்கை ஜனாதிபதி ஜே. ஆர் ஜயவர்த்தனாவை வற்புறுத்தி வடக்கு கிழக்கு
மாகாணங்கள் தமிழர்களின் தாயக பிரதேசங்கள் என ஒப்புகொள்ள வைத்து அந்த இரு மாகாணங்களையும் இணைத்து வைத்தார். அந்த ஒரு
அரிய சந்தர்ப்பத்தினை விடுதலை புலிகள் நாசமாக்கி அழித்து வைத்தார்கள். இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக இந்தியாவின் பிரதமர் ராஜீவ்
காந்தி நடந்து கொண்டார் என்ற காரணத்திற்காகவும், இலங்கை அரசினை பயமுறுத்தி பணிய வைத்தார் என்ற ஆத்திரத்தின் காரணமாகவும்
அணிவகுப்பு மரியாதையின் போது ஒரு சிங்கள கடற்படை வீரன் ராஜீவ் காந்தியை துப்பாக்கி பிடியினால் தாக்கியிருந்தான். இந்திய அரசு
இலங்கை தமிழர்களுக்கு விரோதமாக நடந்து கொள்ளுகின்றது என கூறி வரும் தமிழக தலைவர்கள் சிலர் இதனை இரைமீட்டு பார்க்க
வேண்டும். இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக நடந்து கொண்ட இந்தியாவை சலிப்புற செய்தவர்கள் யார் என்பதினை இன்று இருக்கும் பலருக்கு
தெரியாது. இன்று புலிகளின் ஆயுதம் ஏந்துபவர்களுக்கும், ஆதரவாளர்களாக இருக்கும் பலருக்கும் அப்போது 7 வயதாக இருந்திருக்கும்.
ஆகையினால் இதனை அவர்கள் அறிந்திருக்க நியாயம் இல்லை. இதனை அறிந்து புரிந்து கொண்ட சம்மந்தவர் போன்ற தலைவர்கள்
புலிகளின் தயவில் கிடைத்த பாராளுமன்ற உறுப்பினர் பதவியினை அனுபவித்து வருவதனால் பேவதற்கு நாதியற்று போயுள்ளனர். நக்குண்டார்
நாவிழந்தார் என்ற நிலை சம்மந்தருக்கும் ,தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பலருக்கும் ஏற்பட்டுள்ளது.
கோத்தாபயவையும், சரத் பொன்சேகாவையும் பலம் பெற செய்தவர்கள் யார்?
கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது வடக்கு கிழக்கு மாகாண மக்களை பயமுறுத்தி அவர்களை வாக்களிக்க விடாது , பெருமளவான
பணத்தினை மஹிந்தவிடம் பெற்று அவரை ஆட்சி பீடம் ஏற வைத்த புலிகள் இன்று , அவர்கள் இனப்படுகொலை செய்வதாக ஜாலம்
செய்கின்றனர். யாழ்பாணத்தில் தற்பொழுது ஏறத்தாள மூன்று லட்சம் மக்கள் மட்டளவிலேயே இருக்கின்றார்கள். இந்த எண்ணிக்கையினை
காட்டிலும் அதமாக தெற்கில் தமிழர்கள் வசித்து வரும் நிலையில் ,இனப்படு கொலைசெய்வதாக இருந்தால் வன்னிக்கு சென்று அவர்களை
கொல்ல வேண்டிய தேவை அரசிற்கு ஏற்படாது. அரச கட்டுப்பாட்டு பகுதிகளில் இருக்கும் தமிழர்களை அரசு கொல்கின்றது என்றால் தமிழர்கள்
பாதுகாப்பு தேடி அரச கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு செல்லுகின்றார்கள். இவைகள் எல்லாம் புலிகள் தம்மை காப்பாற்றி கொள்வதற்கு போடும்
ஜாலங்கள் என்பது மக்கள் பலருக்கு தெரிந்திருந்தும், அவர்கள் மரண பயத்தினால் வாய்பேச முடியாதவர்களாக இருக்கின்றார்கள்.
மஹிந்தவிடம் பணம் பெற்றுக் கொண்டு நீங்கள் தானே அவரை பதவிக்கு கொண்டு வந்தீர்கள் என நான் , தன்னை புத்திஜீவி என நம்பும் புலி
ஊடகவியலாளர் ஒருவரிடம் அப்பொழுது கேட்டிருந்தேன். அதற்கு அவர் பதில் கூறுகையில் “ ரணில் ஆட்சிக்கு வந்தால் அவர் சமாதான
பேச்சுக்கள் என இழுத்தடிப்பார் ,இதனால் சண்டை செய்ய முடியாது, மகிந்தாவை ஈசியாக சண்டைக்கு இழுக்கலாம் என்றார்” மகிந்தாவை
சண்டைக்கு இழுத்தவர்கள் தமது கட்டுப்பாட்டு பிரதேசங்கள் பலவற்றை இழந்து,யுத்தத்தினை நிறுத்தவதற்கு பின் கதவுகளினால் முயற்சிகள் பல
செய்து தோல்வி கண்டுள்ளனர். வை .கோ ஊடாக ஆண்மீக தலைவர் குருஜி. ரவி சங்கர் மேற்கொண்ட முயற்சிகளும் புலிகளுக்கு கை
கூடவில்லை.
இராணுவம் களமுனையில் பல வெற்றிகளை கண்டுவரும் நிலையில் பாதுகாப்பு செயலர் கோத்தாபயவினதும், இராணுவ தளபதி சரத்
பொன்சேகாவினதும் பேச்சுக்களில் மாற்றங்கள் ஏற்பட ஆரம்பித்து உள்ளன. தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு ஒன்று தேவையில்லை, அதனை
கேட்பவர்கள் தமிழ் அரசியல் வாதிகள் தான் எனவும், பயங்கரவாதிகளில் 98 வீதமானவர்கள் தமிழர்கள் தான் என்றும் கோத்தபய
கூறியிருக்கின்றார். இலங்கையில் அரசியல் படுகொலையினை செய்த முதல் பயங்கரவாதி முன்னாள் பிரதமர் பண்டாரநாயக்காவை கொலை
செய்த ஒரு பெளத்த பிக்கு என்பதினை கோத்தாபய தெரிந்து கொள்ள வேண்டும். சிறுபான்மையின மக்களுக்கு அதிகாரங்களை பகிர்ந்து
அளிக்க கூடிய ஒரு அரசியல் தீர்வினை சிங்கள அரசுகள் எவையும் தாமாக முன்வந்து ஒரு போதும் முன்வைக்காது என்பது பண்டா -செல்வம்
ஒப்பந்தம் தோல்வி கண்ட போதே தமிழர்கள் புரிந்து கொண்டார்கள். இதனால் தான் எமக்கு ஒரு மூண்டாம் தரப்பின் உத்தரவாதம் வேண்டும்
என முடிவு செய்தோம், எமது பிராந்திய மற்றும் புவியல் தன்மைக்கு ஏற்ப இந்தியாவை தவிர அந்த மூன்றாம் தரப்பு யாராகவும் இருக்க
முடியாது என்பதினையும் புரிந்து கொண்டோம். அதனூடாக வந்த அரிய வாய்ப்பினை தவற விட்டு ,இன்று இலங்கை சிங்களவர்களின் நாடு
என சரத்பொன்சேகா வெளிப்படையாக கூறும் அளவிற்கு யார் நடந்து கொண்டார்கள். வடக்கு கிழக்கு தமிழர்களின் தாயக பிரதேசம் என
எழுத்தில் வடித்த இலங்கை இந்திய ஒப்பந்தத்தினை , அன்றைய ஜனாதிபதி பிரமதாசாவுடன் கைகோர்த்துக் கொண்டு அதனை நடைமுறைப்
படுத்த விடாது நாசமாக்கியவர்கள் யார் ? ஈழ தமிழர்களின் விடுதலைக்காக போராடுவதாக கூறிக்கொள்ளும் இதே புலிகள் இதனை
செய்திருந்தார்கள். அரசியலில் வங்குரோத்து தனமும், இராஜதந்திரத்தின் அவசியமும் அறியாத புலிகள் , உயிர்களை பலியெடுப்பதில் மட்டும்
அன்று தொடக்கம் இன்று வரை கைதேர்ந்தவர்களாக இருக்கின்றனர்.
இலங்கை தமிழர்களுக்கு கிடைத்த ஒரு அரிய வாயப்பான இந்திய இலங்கை ஒப்பந்ததினை புலிகள் நாசமாக்கியது ஈழ தமிழர்களுக்கு புலிகள்
செய்த ஒரு வரலாறு துரோகம் என்று இன்னமும் எத்தனை வருடங்களுக்கு கூறுவீர்கள் என்று எனக்கு இலத்திரனியல் கடிதத்தில் ஒருவர்
கேட்டிருந்தார். இன்னமும் எத்தனை ஆண்டுகளுக்கு இப்படியாக புலிகளை குற்றம் கூறிக்கொண்டே இருப்பீர்கள் எனவும் கேட்டிருந்தார்.
புலிகளின் நடடிக்கைகளில் அவர்கள் திருந்துவார்கள் என்பதற்கான சமிக்கைகள் தென்படவில்லை. ஏகப்பிரதிநித்துவம் என்கின்ற அவர்களின்
நிலையில் இருந்து அவர்கள் எள்ளளவும் மாறவில்லை. மாற்று கட்சி உறுப்பினர்களை கொலை செய்வதினை அவர்கள் இன்னமும்
நிறுத்தவில்லை. இராஜதந்திரத்தின் இரகசியம் (secrete of diplomacy) இன்னமும் அவர்களுக்கு புரியவில்லை, பழிவாங்கும்
பழக்கம் இன்னமும் அவர்களிடம் இருந்து போகவில்லை,ஐரோப்பிய ஒன்றியம் அவர்களை தடைசெய்வதற்கு காரணமாக இருந்த அரசியல்
கொலை,மாற்றுகருத்து உடையவர்கள் மீதான கொலை, அப்பாவி மக்கள் மீதான குண்டு தாக்குதல், தற்கொலை தாக்குதல் என்பதினை
அவர்களினால் தவிர்க்க முடியவில்லை, தமது பாதுகாப்பிற்காக தமிழர்களை பாவிக்கும் பழக்கத்தினை அவர்கள் இன்னமும் விடவில்லை.
புலிகள் இப்படி இருக்கையில் எப்படியப்பா அவர்களை நான் வாழ்த்த முடியும். இலங்கை இந்திய ஒப்பந்ததினை செயற்பட விடாது புலிகள்
தடுத்தமை ஈழ தமிழர்களுக்கு புலிகள் செய்த ஒரு வரலாற்று துரோகமாகும். ஈழ தமிழனம் இந்த உலகில் வாழும் வரை இந்த வரலாற்று
துரோக்கம் மறக்கப்பட மாட்டாது.
நேருவினை நான் சாமளித்து கொள்கின்றேன் பாரதத்தின் முதல் பிரதமர் நீயே தான் ,ஆனால் பாரதத்தினை பங்கு போடுமாறு கேட்காதே என்று
காந்திஜி கண்கலங்கியவாறு ஜின்னாவை கேட்ட போதும் கூட , இல்லை முஸ்லீம்களுக்கு என்று ஒரு நாடு வேண்டும் என்று திடமாக
நின்றானே அந்த ஜின்னா ,அவனை 61 ஆண்டுகளுக்கு பின்னரும் இன்று நாம் பேசவில்லையா? இதே போன்று ஆண்டுகள் ஆயிரம்
கடந்தாலும், இலங்கையின் ஒரு பகுதி தமிழர்களின் தாயகமென எழுதப்பட்டு, நடைமுறை படுத்ததப்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்ததினை
நாசமாக்கினாரே பிரபா அவரையும் வரலாறு மறக்காது.
புலிகளை விமர்சனம் செய்யும் மாற்று தமிழ் கட்சிகள் ஈழத் தமிழர்களை எவ்வாறு காப்பாற்ற போகின்றார்கள் என்பதே தற்போதைய
கேள்வியாகும். புலிகளை ஒடுக்கின்ற அதேவேளையில் வெறு எந்த தமிழ் அமைப்புக்களையும் பல பெற செய்யக் கூடாது என்பதில்
மஹிந்தவின் அரசு மிகவும் அவதானமாக இருக்கின்றது. இதனை அமைச்சர் டக்ளஸ் , தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர்
ஆனந்தசங்கரி, புளொட்டின் தலைவர் சித்தார்த்தன், இ.பி.ஆர்.எல்.எவ் பத்மநாபா பிரிவின் செயலர் சிறீதரன் ஆகியோர் நன்றாக உணர்ந்து
கொண்டிருப்பார்கள்
Post a Comment